அத்திவரதர் தரிசனம்: போலி விஐபி பாஸ் தயாரித்த அமமுக நிர்வாகி உள்பட 11 பேர் கைது!

காஞ்சிபுரம்:

த்திவரதர் தரிசனம் பெற லட்சக்கணக்கானோர் கூடிய நிலையில், போலி விஐபி, விவிஐபி பாஸ் தயாரித்து அதிகவிலைக்கு விற்று வந்ததாக அமமுக அலுவலக நிர்வாகி உள்பட  11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் தரிசனம் தரும் அத்திவரதரை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து சுமார் 1 கோடிக்கும் மேலான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தந்தனர். அத்திவரதர் வைபம் கடந்த  ஜூலை மாதம் 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரையில் நடைபெற்றது.

இந்த வைபத்தின்போது, அத்திவரதரை தரிசிக்க விஜபி, விவிஐபி சிறப்பு தரிசன பாஸ்கள் மாவட்ட நிர்வாகத்தால்  அளிக்கப்பட்டன. இதில் பல்வேறு குழறுபடிகிள் எழுந்தாக குற்றம் சாட்டப்பட்டது. ஏராளமானோர் விஐபி பாஸ்கள் மூலம் தரிசனத்துக்கு குவிந்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது, பலரிடம் இருந்து பெறப்பட்ட  பாஸ்களை ஸ்கேன் செய்தபோது பல பாஸ்கள் போலியாக அச்சடிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.  இதனை தொடர்ந்து பாஸ்களை போலியாக அச்சடித்து விற்பனை செய்த நபர்களை போலீஸார் வலைவீசி தேடி வந்தனர்.

இதுகுறித்து கூறிய காவல்துறை அதிகாரி,  விஐபி நன்கொடையாளர் பாஸ்கள் ஆரம்பத்தில் துணை கலெக்டர் பதவியில் உள்ள ஒரு அதிகாரி மூலம்  வழங்கப்பட்டன, ஆனால் பாஸ் கேட்டு வருபவர்களின் கோரிக்கை உயர்ந்து வந்தது. அதே வேளையில், விஐபிக்கள் செல்லும் மேற்கு நுழை வாசலிலும் சுமார்  5,000-10,000 பேர் பாஸ் உடன்  நிற்கத் தொடங்கினர்.

இது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில்,  போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எம்.நாகராஜன் சில ஜூனியர் அதிகாரிகளிடம் வி.ஐ.பி பாஸ்களை பார் குறியீட்டை ஸ்கேன் செய்து சரிபார்க்கச் சொன்னார். அப்போது பல பாஸ்கள்  போலியானவை எனக் கண்டறிந்து அவற்றை வைத்திருப்ப வர்கள் விசாரணைக்கு  உட்படுத்தப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் வசிக்கும் நவுசத் (33) என்ற நபரை பிடித்து காவல்துறையினல் விசாரணை மேற்கொண்டனர்.  ஆகஸ்டு  17 ஆம் தேதி அதிதிவரதர் வைபம் திருவிழா முடிந்ததும், விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் நவுசத்தை கைது செய்து தீவிரமாக விசாரித்தனர்.  அப்போது, அவர்  வடபழனியில் உள்ள ஒரு அச்சகத்தில் போலி பாஸ் அச்சடிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையில், அங்கிருந்து பிரவுன் கலர்  5,000 போலி விஐபி பாஸ்கள் கைப்பற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த பிரசின் உரிமையாளர் செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்அலுவலக பொறுப்பாளர் பதவில் உள்ளார். அவருடன்  ரமேஷ், 32, அப்துல் காதர், 38, பாபு, 37, அசோக், 34, காளிவரதன், 42, தனசேகர், 32, பிலால், 32, பிலால், 31, மற்றும் ஜாஹிருதீன், 28 ஆகியோர் கைது செய்யப்பட்டடனர். கைது செய்யப்பட்ட  அனைவரும் காஞ்சீபுரத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் ஒரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பபட்டனர் என்று தெரிவித்து உள்ளார்.