அத்திவரதர் ஆகம விதிமுறைப்படியே வைக்கப்படுவார்: ஜீயருக்கு அறநிலையத் துறை அமைச்சர் பதில்

காஞ்சிபுரம்:

த்திவரதரை எங்கு வைப்பது என்பது குறித்து ஆகம விதிகளில் கூறியுள்ளதே பின்பற்றப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஜீயரின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார்.

அத்திவரதரை மீண்டும் குளத்துக்குள் வைக்கக் கூடாது என்றும், கடந்த காலங்களில் திருட்டு பயத்தால்தான் அத்திவரதர் சிலை பூமிக்கடியில் புதைக்கப்பட்டது, 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்துள்ள அத்திவரதரை இனி புதைக்க தேவையில்லை, எனவே அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் புதைக்கக் கூடாது’ என்று   கோரிக்கை வைக்கப்போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ஜீயரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இது தொடர்பாக இந்து மடாபதிகள் மற்றும் ஆன்மீவாதிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை  பார்வையிட்டு, அத்திவரதரை தரிசனம் செய்த  இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் செய்தியாளர்கள் ஜீயரின் கருத்து குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், ஆகம் விதிகள் என்னவோ, அதில் எந்த மாற்றமும் இருக்காது, அதன்படியே அனைத்தும் நடைபெறும்  எனக்கூறி ஜீயர் கோரிக்கையை நிராகரித்தார்.

அதுபோல, செய்தியாளர்களிடம் பேசிய  மாவட்ட ஆட்சியர் பொன்னையா, ஆகம விதிப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை இந்து சமய அறநிலையத் துறை முதல்வரிடம் கலந்து பேசி இறுதி செய்யும்” என்றும்  தெரிவித்தார்.