நிவின் பாலி நடிக்கவுள்ள ‘படவெட்டு’ படத்தின் நாயகியாக அதிதி பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை அறிமுக இயக்குநர் லிஜோ கிருஷ்ணா இயக்கவுள்ளார். மலையாள நடிகர் சன்னி வேய்ன் தயாரிக்கவுள்ளார்.கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

‘அருவி’ படத்துக்குப் பிறகு வேறு எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமலிருந்தார் அதிதி பாலன். ‘படவெட்டு’ படத்தின் கதையைக் கேட்டு உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.