Random image

கௌகாத்தி: தடகள வீரர் ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான வரவேற்பு! 

ந்திய தடகள வீர்ர் ஹிமாதாசுக்கு கௌகாத்தியில் வித்தியாசமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அஸ்ஸாமைச் சேர்ந்த தடகள வீரர் ஹிமாதாஸ்,  ஜகார்த்தா ஆசியப் போட்டியில் மூன்று பதக்கங்கள் வென்றுள்ளார்.  4×400 தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் கலப்பு தொடர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கங்களும்  வென்றார். ஜகார்த்தா ஆசியப் போட்டியில்தான் முதன்முறையாக கலப்பு தொடர் ஓட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.  ஜகார்த்தா ஆசியப் போட்டியில், இந்தியக் குழு 15 தங்கப்பதக்கங்ளுடன் 69 பதக்கங்களை வென்று  நாடு திரும்பியது.

டில்லியில், பிரதமர் மோடியை நேற்று  சந்தித்து வாழ்த்துப்பெற்ற வீரர் – வீராங்கனைகள், அவரவர் சொந்த ஊருக்குப் பயணப்பட்டனர்.  ஹிமா தாஸ் கவுகாத்திக்கு இன்று வந்தார். அவரை வரவேற்க அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்போனாந்தா ஸோனாவால் தலைமையில் பெரிய குழுவே கவுகாத்தி விமான நிலையத்துக்கு வந்திருந்தது.

ஹிமா தாஸ், தமது அஸ்ஸாம்  மாநிலத்துக்கே கௌரவம்  தேடித் தந்திருப்பதால், மாநில முதலமைச்சரே அவரை வரவேற்க நேரடியாக விமான நிலையத்துக்கு வருகை புரிந்தார்.

விமான நிலையத்தில், வழக்கமாக சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படும். ஹிமா தாஸுக்கு சிவப்புக் கம்பளத்துக்கு பதிலாக வித்தியாசமாக தடகள ட்ராக் அமைக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஹிமாதாஸ் பயிற்சி எடுத்த சாருசுஜை ஸ்டேடியத்துக்கு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டார். வழி நெடுகிலும் மக்கள் கூட்டமாகத் திரண்டுநின்று அவருக்கு வாழ்த்து முழக்கம் எழுப்பினார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்,  20 வயதுக்குட்பட்டோருக்கான உலகத் தடகளத்தில் 400 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ்  தங்கம் வென்றபோது, இந்தியா முழுக்க பிரபலம் ஆனார். உலகத் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.