மு.க.ஸ்டாலினுடன் தடகள வீராங்கனை கோமதி சந்திப்பு: ரூ.10லட்சம் நிதி வழங்கினார்

சென்னை:

சிய போட்டியில் தங்கம் வென்ற  தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு திமுக தரப்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், இன்று  தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவை திமுக தலைமையகம் வரவழைத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.

தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து கலந்துகொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கேமாதி மாரிமுத்து தனது தாயாருடன் சந்தித்தார்.

அப்போது கோமதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோமதி, தன்னை விட வருமையில் பலர் இருப்பதாகவும் அவர்களுக்கு தமிழக அரசு உதவினாலே தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறினார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Athletic Gold medal winner, Gomathi marimuthu, MK Stalin
-=-