அறிமுக இயக்குனர் எஸ்.கே வெற்றிசெல்வன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ‘கேப்மாரி’ என்ற படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ஜோடியாக நடிக்கிறார்கள். இந்நிலையில் எஸ்.கே வெற்றிசெல்வன் படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார் .

ஹாலிவுட் நிறுவனமான ரெயின் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட்டின் கிளை நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இந்த படம் ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில், வைபவ்வின் சகோதரர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.