ஆப்கன் குண்டுவெடிப்பில் 10 பேர் பலி

காபூல்:

ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

நன்கர்ஹார் மாகாணத்துக்குட்பட்ட ரோடாட் மாவட்டத்தில் நேற்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 36 பேர் உடல் சிதறி பலியாகினர்.

இதற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுபேற்றது. இந்நிலையில் இன்று அதே நன்கர்ஹார் மாகாண கவர்னர் அலுவலகம் அருகே குண்டுவெடித்தது.

இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.