இதுவும் காப்பி தானா…? அட்லீயை கலாய்க்கும் நெட்டிசன்கள்…!

தமிழ் சினி உலகில் காப்பி கேட் என்ற பட்டம் வென்றவர் அட்லீ .

அவரின் முதல் படமான ராஜா ராணி மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது .ஆனால் அது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் படத்தின் கதையோடு ஒத்துப்போவதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து தெறி , விஜயகாந்தின் சத்ரியன் கதைதான் என்று விமர்சிக்கப்பட்டது .மெர்சல் அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதைக் கருவோடு ஒத்துப் போவதாக புகார் எழுந்தது.

மூன்றாவதாக பிகில் திரைப்படம் கதை தன்னுடையது என்று கூறி குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா நீதிமன்றம் சென்றார்.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு தனது மனைவி பிரியாவுடன் அட்லீ எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார் . ஆனால் அதுவும் காப்பிய தான் .. சொந்தமா எதையுமே செய்யமாட்டியா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர் .

அந்த புகைப்படம் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது மனைவியுடன் 2017-ம் ஆண்டு எடுத்த புகைப்படமும் ஒரே மாதிரி இருப்பதாக தெரிவித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-