ஏடிஎம்க்கு பணம்: கடத்தப்பட்ட வேன் சிக்கியது! டிரைவர் தலைமறைவு

பெங்களூரு:

பெங்களூருவில் வங்கி பணத்துடன்  ஏடிஎம்-ல் நிரப்ப சென்ற வேன் திடீரென மாயமானது. தற்போது வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து  ஏ.டி.எம்.,மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1.37 கோடி பணத்துடன் வேன் கடத்தி செல்லப்பட்டது. தற்போது இந்த வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேனை ஓட்டி சென்ற டிரைவர் குடும்பத்துடன் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

atmvan

பெங்களூரு கே.ஜி., சாலையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து, பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்.களுக்கு பணம் நிரப்ப  ரூ.137 கோடி பணம்  புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டு கட்டுக்களாக இருந்தது. அதை ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரத்திலும் நிரப்ப எடுத்து செல்லப்பட்டது.

பணம் எடுத்து செல்லும் வாகனத்தில் டிரைவர் மற்றும் பணம் நிரப்பும் அலுவலர் இருந்தனர். அவர்களுடன் போலீசாரும் உடன் வந்தனர். ஏடிஎம் அருகே வேன்  சென்றதும், போலீசார் மற்றும் அதிகாரிகள் இறங்கி ஏடிஎம்., மையத்தை சோதனை செய்ய ஏடிஎம் உள்ளே சென்றனர்.

அவர்கள்  உள்ளே  சென்றதும், டிரைவர் வேனை அங்கிருந்து கிளப்பி பணத்துடன் மாயமாகி விட்டார்.

இது குறித்து உடனடியாக வங்கி அதிகாரிகள் போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். நகரம் முழுவதும் வயர்லஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டடு,  வேன் நகரை விட்டு  வெளியேற முடியாத நகையில் பெங்களூரு சீல் வைக்கப்பட்டு அலர்ட் செய்யப்பட்டது. ரோந்து போலீசாரும் பெங்களூர் முழுவதும் சல்லடைபோட்டு   வேனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பணத்துடன் கடத்தப்பட்ட வேன், மவுண்ட் கார்மல் கல்லூரி அருகே அனாதையாக நின்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக வங்கி அதிகாரிகள் அந்த வேனை சோதனையிட்டனர். அதில் எடுத்து வைக்கப்பட்டிருந்த  ரூ.1.37 கோடியில்  ரூ.45 லட்சம் மட்டுமே இருந்தது. மீதமுள்ள ரூ.92 லட்சம் காணவில்லை. டிரைவரையும் காண வில்லை.

போலீசார் நடத்திய விசாரணையில், வேனை கடத்திச் சென்ற டிரைவரின் பெயர் டோம்லிக் ராய் என்பதும், இவர் லிங்கராஜபுரத்தில் உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தது தெரிய வந்துள்ளது.

வேனில் இருந்த ரூ.92 லட்சத்துடன் வேன் டிரைவர் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது.

துபாயில் வேலை பார்த்து வந்த இவர் 4 மாதங்களுக்கு முன்பு தான் இந்தியா வந்துள்ளார்.  வேன் கடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே டோம்லிக் ராய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மாயமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

நேற்று வேன் கடத்தப்பட்டது முதல் டிரைவரின்  மொபைல் போனை ஸ்விட் ஆப் செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்கொண்டு வேன் டிரைவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.