பணம் எடுக்க கியூ: மக்களின் பரிதவிப்பை நேரில் கேட்டறிந்தார், ராகுல்காந்தி!

டில்லி,

500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, புதிய பணம் வாங்க,  வங்கிகளில் மக்கள் படும் கஷ்டத்தை நேரில் சென்று பார்த்து கேட்டறிந்தார் ராகுல்காந்தி.

மத்திய அரசின் 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால் கடந்த இரண்டு நாட்களாக நாட்டு மக்கள் பெரிதும் அவஸ்தை பட்டு வருகிறார்கள்.

rahul

இன்று பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லாமலும், பல ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யாமலும் பிரச்சினைகளை ஏற்படுத்தின. இதன் காரணமாக மக்கள் மேலும் பல இன்னல்களை சந்தித்தனர்.

எந்த வங்கி அருகில் சென்றாலும் மக்களின் நீண்ட வரிசையே காணப்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாது முதியவர்கள், பெண்கள் என அனைவரும் வரிசையில் காத்து கிடந்தது பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

rahul1

இதையறிந்த அகில இந்திய காங்கிரஸ் துணைத்தைலைவர் ராகுல்காந்தி, பணம் எடுக்கும் மக்களின் இன்னல்களை நேரில் சென்று பார்த்து, அவர்களிடம் விசாரித்தார்.

டெல்லியில் பணம் எடுப்பதற்காக வங்கியில் மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்களிடம் கேட்டறிந்தார். நாடாளுமன்ற வீதியில் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு ராகுல்காந்தி சென்று கேட்டறிந்தார்.

1rahul