டெல்லி:

ஏ.டி.எம்.ல் ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர்8 ம் தேதி மோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் ஏ.டி.எம். பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. முதலில் ஒரு முறை 2,500 வரை மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் 4,500 வரை எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

 

இவ்வாறு வாரத்திற்கு ரூ. 24 ஆயிரம் வரை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில இனி சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் ரூ.10 ஆயிரம் வரை ஏடிஎம்.களில் எடுத்துக் கொள்ளலாம் என் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வாரத்திற்கு ரூ. 24 ஆயிரம் என்ற கட்டுப்பாட்டில் மாற்றம் செய்யப்படவில்லை.

அதேபோல் நடப்பு கணக்குகளில் இது வரை 50 ஆயிரம் வரை எடுக்கலாம் என்பதை வாரத்துக்கு ரூ.1 லட்சம் எடுக்கலாம். என்றும் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.