வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி: தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை:

மிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக  தமிழகத்தில் இன்று  9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  சென்னை உள்பட சில மாவட்டங்களிலும், கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களிலும், மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது,  தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதால், வட தமிழகம் மற்றும் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.