அணுவைக் கண்டறிந்தவர் சரக முனிவர் : மத்திய அமைச்சர் உரை

மும்பை

ணுவைக் கண்டு பிடித்தவர் சரக முனிவர் எனமத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

சென்ற வருடம் நடந்த ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் ஐம்பது மாணவர்களில் 47 பேர் மும்பை ஐஐடியில் சேர்ந்துள்ளனர்.   முதல் இடம் பெற்ற 100 பேர்களை ஒப்பிடும் போது 63  பேர் இங்குச் சேர்ந்துள்ளனர்.  மும்பை ஐஐடி யின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடந்தது.   இந்த விழாவில் 2603 பேர் பட்டப்படிப்பு சான்றிதழும் 385 பேர் முனைவர் சான்றிதழும் பெற்றுள்ளனர்.   அத்துடன் முதல் இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விழாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கலந்துக் கொண்டு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.  ரமேஷ், “நாசா  நடக்கும் கணினிகளைக் கண்டுபிடிப்பதாகக் கூறி உள்ளதாகச் செய்திகள் வருகின்றன.  அவை எல்லாம் ஏற்கனவே சமஸ்கிருதத்தில் காணப்படுவதாகும்.   சமஸ்கிருதம் என்பது விஞ்ஞான மொழி ஆகும்.  மற்ற மொழிகளை விட அதன் சிறப்பு என்னவென்றால் பேச்சு மொழியைப் போலவே எழுத்து மொழியும் உள்ளதாகும்.

அனைத்து மருத்துவ மனைகளிலும் ஆயுஷ் என்னும் பிரிவு உள்ளது.  இதற்குக் காரணம் இந்த வார்த்தை ஆயுர்வேதம் என்பதில் இருந்து வந்தது ஆகும்.    இந்த ஆயுர்வேதம், யோகா, சித்தா, யுனானி,  ஹோமியோபதி உள்ளைட்டவைகள் அடங்கியதே ஆயுஷ் ஆகும்.  மோடி அரசு கடந்த 2014 ஆம் வருடம் ஆயுஷ் அமைச்சகத்தை உருவாக்கியது   நமது பிரதமர் யோகா மூலம் உடல் மற்றும் மனதை குணப்படுத்த முடியும் என்பதை உலகெங்கும் தெரியப்படுத்தி உள்ளார். இதை 199 நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளது.

பழங்காலத்தில் வாழ்ந்த சரக முனிவர் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்து விளங்கியவர் ஆவார்.  அவர் அணு மற்றும் மூலக்கூறுகள் பற்றி கண்டறிந்துள்ளார்.   இவை அனைத்தும் சரக முனிவரின் கண்டுபிடிப்புக்களாகும்.  அதன் அடிப்படையில் தற்போது விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது    இவை அனைத்தும்  ஏற்கனவே நாளந்தா மற்றும் தக்சசீலம் ஆகிய பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப் பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.