சண்டிகர்:

சிறுபான்மையினர் மற்றும் தலித்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது என்று முன்னாள பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ இந்திய மக்களிடையே ஜாதி, மத, மொழி ரீதியில் பிரிவினை ஏற்படுத்தும் சமீபத்திய முயற்சிகள் கவலை அளிக்கிறது. சிறுபான்மையினர், தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது.

இதை கவனிக்கவில்லை என்றால் நமது ஜனநாயகத்தின் மீது வெறுப்பு உண்டாகும். பிரிவினை அரசியல், கொள்கைகளை அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும். ஆளும் கட்சியினர் பணபலம் மற்றும் அதிகார பலத்துடன் தேர்தல்களை சந்தித்து வருவது கவலை அளிக்கிறது’’ என்றார்.