ராமநாதபுரம் அருகே பாஜக பிரமுகரை  5 பேர் கொண்ட கும்பல் பயரங்கர ஆயுதங்களால் தாக்கியதில் கடுமையான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் ராமநாதபுரம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ராமநாதபுரம் எஸ்.எம். அக்ரஹாரம் சுப்பையா சேர்வை சந்து பகுதியில் வசித்து வருபவர் ராமன் மகன் வீரபாகு (வயது 48). ஆட்டோ ஓட்டுநர். இவர் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருவர் பேராவூரில் உள்ள ஒருவரை அழைத்து வர ஆட்டோ தேவைப்படுகிறது என்று வீரபாகுவை அழைத்துச் சென்றனர்.  பேராவூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில் இருளில் ஆட்டோவை நிறுத்துமாறு கூறியிருக்கிறார்கள்.

ஆட்டோவை வீரபாகு நிறுத்தியதும் அங்கு வந்த மேலும் 3 பேர் சேர்ந்து அரிவாள், கத்தி, கம்பு போன்றவற்றால் வீரபாகுவை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பிய வீரபாகு, அந்த வழியாக வந்த நகரப் பேருந்தில் ஏறி தப்பி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்துள்ள அவருக்கு ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் டி.எஸ்.பி. எஸ். நடராஜ், ஆய்வாளர்கள் செந்தில்குமார், சிவசக்தி ஆகியோர் வீரபாகுவிடம் நேரில் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து வீரபாகுவின் மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

வீரபாகு தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் பா.ஜ.க.வினர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

 

 

 

இராமநாதபுரம் ஆனந்தா ஜவுளி கடை ஆட்டோ ஸ்டான்டில் ஆட்டோ ஓட்டும் இராமநாதபுரம் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாகு இன்று இரவு சுமார் 7.30 அளவில் சவாரி சென்றுவிட்டு வரும்போது இடையில் ஆட்டோவை நிறுத்தி சவாரி ஏறிய சிலரால் இரமநாதபுரம் அருகேயுள்ள பேராவூரில் உள்ள எம்.ஜி ஸ்கூல் அருகே ஆட்டோவை நிறுத்தி கொடூரமாக வீரபாகுவை அரிவாளல் வெட்டியுள்ளனர். வெட்டுப்பட்ட வீரபாகு அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி இடையில் வந்த பஸ்ஸை மறித்து அதில் ஏறி காவல் நிலையம் வந்துள்ளார். அதன் பின் காவல் துறையால் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைதியான சூழ்நிலை நிலவும் இராமநாதபுரத்தில் வீரபாகு மீது தாக்குதல் நடத்தியிருப்பது வண்மையாக. கண்டிக்கதக்கது. காவல்துறை உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். இராமநாதபுரத்தில் மத மோதல்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.