வைகோவை தரக்குறைவாக பேசிய போதை வழக்கறிஞர்கள் மீது தாக்குதல்

வைகோவை தரக்குறைவாக பேசிய போதை வழக்கறிஞர்கள் இருவரை ம.தி.மு.க.வினர் தாக்கியது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

பிரணாப் முகர்ஜி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி வந்தார். அப்போது அவருக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில், தூத்துக்குடி இரண்டாவது ஜுடிஷியல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராக வந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில்  மதுபோதையில் இருந்த வழக்கறிஞர்கள் ஜெகதீஷ் மற்றும் முத்தையாபுரத்தை சார்ந்த வெற்றிவேல் ஆகிய இருவரும் மதுபோதையில் வைகோவை பார்த்து தரக்குறைவாக கூச்சல் போட்டனர். அதை சிறிதும் பொருட்படுத்தாமல்  கண்டு கொள்ளாமல் வைகோ நீதிமன்றம் சென்று கோர்டில் ஆஜராகிவிட்டு திரும்பினார்.

அப்போதும் அவர்கள்ள் மீண்டும்  வைகோவைகோவை பார்த்து மீண்டும் தரக்குறைவாக கூச்சலிட்டனர். ஆனால் வைகோ அதை பொருட்படுத்தாமல்  வெளியே வந்தார். தொடர்ந்து அவர்கள் இருவரும் வைகோ பெயரை கூறி தரக்குறைவாக கூச்சல் போட்டனர். இதனால் வைகோ உடன் வந்த மதிமுகவினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது கைகலப்பாக மாறியது.

இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர், குடிபோதையில் இருந்த வழக்கறிஞரை மீட்டு கொண்டு சென்றனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

You may have missed