இந்தூர்: மோடி அரசின் குடியுரிமைச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் அரசியலமைப்பிற்கு எதிரான தாக்குதல் என்று கூறியுள்ளார் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்.

குடியுரிமை சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தில் மாபெரும் அமைதிப் பேரணியை முதல்வர் கமல்நாத் நடத்தினார்.

பேரணியின் முடிவில் அவர் ஆற்றிய உரையில், “நான் தீவிர அரசியலுக்கு வந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆனால், சிஏஏ மற்றும் என்ஆர்சி போன்ற மோசமான அரசியலமைப்பு தாக்குதல்களைப் பார்த்ததில்லை.

பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மாறி மாறி பேசுகின்றனர். குடியுரிமைச் சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு தவறாக பயன்படுத்தப்படுவது குறித்தே நாங்கள் பேசுகிறோம்” என்றார்.

கமல்நாத் உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் முதல்வர்களும் மோடி அரசின் மேற்கண்ட இரண்டு அம்சங்களையும் எதிர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.