டெல்லி:

பாகிஸ்தானில் உள்ள சீக்கியமத  குருத்வாரா மீது விஷமிகள் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, அங்கு்ளள சீக்கியர்களின் பாதுகாப்பை ம்திதய அரசு உறுதி்ப்படுத்த வெண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

சீக்கியர்களின்  குரு குருநானக் பிறந்த இடமான பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில்  ஸ்ரீ நான்கானா சாஹிப் குருதுவாரா புனித ஸ்தலமாக கருதப்பட்டு வருகிறது. இங்கு சமீபத்தில்  ஒரு கும்பல் கல்விசி  தாக்குதல் நடத்தியது. அங்குவரும் சீக்கியர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து  வன்முறையை தூண்டும் வகையில் சில இஸ்லாமியர்கள் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தக்கு அகில இந்திய  காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில்,  நன்கானா சாகிப் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. சீக்கிய மதத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக பாகிஸ்தான் அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிந்து தண்டனை கிடைக்க பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அழுத்தம் தரவேண்டும்  என வலியுறுத்தி உள்ளார்.