டில்லி:

தீவிரவாதிகளுக்கு ஆதரவு, நிதியுதவி அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ டிஜிஎம்ஓ ஷாகிர் மிர்சா, இந்திய ராணுவ டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகானை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், ‘‘எல்லை தாண்டி காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு மட்டுமே பதிலடி கொடுக்கப்படுகிறது. தீவிரவாத செயல்களை பாகிஸ்தான் ஆதரிப்பதை ஏற்க முடியாது. தீவிரவாதிகளுக்கு ஆதரவு, நிதியுதவி அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். அதுவரை பதிலடி தொடரும்’’ என்று பதிலளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.