சென்னை :

காவல்துறையினரை தாக்குவது வன்முறையின் உச்சம்  என்று ரஜினி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராகவும் சென்னையில் நேற்று பல்வேறு அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தின.  இதில் போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், தெரிவித்துள்ளதாவது:

“வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து ஏற்படும்.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று ரஜினி ட்விட்டியுள்ளார்.