விக்ரம் சுகுமாரன் – தினேஷ் இணையும் ‘தேரும் போரும்’….!

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் படம் ‘தேரும் போரும்’ .

ஒளிப்பதிவாளராக சுகுமார், கலை இயக்குநராக ராஜீவன், எடிட்டராக லாரன்ஸ் கிஷோர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

ஐஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களை ஏகாதசி எழுதியுள்ளார். பாடல் பதிவும் முடிவடைந்துள்ளது .

மார்ச் முதல் வாரத்தில் சிவகங்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

மிகுந்த பொருட்செலவில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பங்குபெரும் “தேரும் போரும்” படத்திற்கு இப்போதே சினிமா வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தாய் சரவணனின் நல்லுசாமி பிக்ஸர்’ஸ் சார்பாக நடிகர் அருள்தாஸ் மற்றும் கார்த்திக்துரை இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்குகின்றனர்.