அய்யப்ப பக்தர்களே அட்டென்ஷன் ப்ளீஸ்!

பரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல பூஜையின்போது சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16 ஆம் தேதி துவங்குகிறது. இதையொட்டி நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27 ஆம் தேதி மூடப்படுகிறது. அதைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 31 ஆம் தேதி மாலை திறக்கப்பட்டு ஜனவரி 19 ஆம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜை நேரங்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்   அதிகமாக கூடுவர். தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் உட்பட இந்தியா முழுமையில் இருந்தும் பக்தர்கள் குவியத்துவங்குவர்.

ஆகவே பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகளை கேரள அரசு செய்துள்ளது. அதே போல சில அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.

அவையாவன:

இணைய முன்பதிவு:

பக்தர்கள் இணையதளம் மூலம் தரிசன நேரத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்தவர்கள், அதற்கான கூப்பனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்துக்கு 15 நிமிடம் முன்போ, பின்போ சென்றால் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் என்றால் பொது தரிசனத்தில்தான் செல்ல வேண்டும்.

இணையத்தில் முன்பதிவு செய்ய, www.sabarimalaq.com என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் பக்தர்கள் தங்கள் பெயர், முகவரியோடு, புகைப்படத்தையும் விர்ச்சுவல் கியூ  கூப்பன் திட்டத்தில் பதிவேற்ற வேண்டும். பிறகு செல்ல விரும்பும் தேதி, எந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய விருப்பம் என்பதையும் பதிவு செய்ய வேண்டும். சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோர் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை எந்த நேரம் தங்களுக்கு ஏற்றதோ அந்த நேரத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடன் ஏதாவது ஓர் அசல் அடையாள அட்டை, பதிவிறக்கம் செய்யப்பட்ட கூப்பன் ஆகியவற்றுடன் பம்பை செல்ல வேண்டும். அங்கு இதற்கான சிறப்பு கவுன்ட்டர்களில் இவை பரிசோதிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும்.

வேண்டாம் பிளாஸ்டிக்:

இந்த வருடம் மண்டல பூஜைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு வரவேண்டாம் என்ற கேரள மாநிலக் காவல்துறை வேண்டுகோள் விடுத்திருக்கிறது. சபரிமலை கோயில் அடர்ந்த காட்டுப் பகுதி. பெரியார் புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது. ஆகவே, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தவிர்க்க பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.

மேலும், பம்பை புனித ஆற்றில் சடங்குக்காக பலரும் தங்கள் அழுக்குத் துணிகளை விடுகிறார்கள். இதனால் ஆறு மாசுபடுகிறது.  ஆகவே எவரும் துணிகளை பம்பை ஆற்றில் விட வேண்டாம்.

வாகனம் நிறுத்த..

பேருந்துகளில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை பம்பையில் இருந்து 18 கி.மீ, தொலைவில் இருக்கும் நிலக்கல்லில் நிறுத்த வேண்டும்.  கார்களில் வருபவர்கள் மட்டுமே பம்பை வர வரலாம். ஆனால் வாகனங்களை திரும்ப கொண்டுபோய் நிலக்கல்லில் நிறுத்த வேண்டும்.

சாமி தரிசனம் முடித்துவிட்டு வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து அரசுப் பேருந்து மூலம் நிலக்கல் செல்ல வேண்டும்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: attention please Ayyappa devotees, அய்யப்ப பக்தர்களே அட்டென்ஷன் ப்ளீஸ்!
-=-