உச்சநீதிமன்றத்தில் பாஜக கொடி டிவீட் : நகைச்சுவை நடிகர் மீது வழக்கு தொடர அனுமதி

டில்லி

ச்சநீதிமன்றத்தின் மீது பாஜக கொடி பறப்பது போல் டிவீட் வெளியிடட நகைச்சுவை நடிகர் குணால் கமரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்க்கிடெக்ட் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பிரபல டிவி செய்தி இயக்குனர் அர்னாப் கோசுவாமி மீது குற்றம் சாடடப்பாடு அவர் கைது செய்யப்படடார். அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இது குறித்து பிரபல நகைச்சுவை நடிகரான குணால் குமரா டிவிட்டுகளை வெளியிடடார்.

அதில் அவர் உச்சநீதிமன்றத்தின் மீது பாஜக கொடி பறப்பது போல் படம் வெளியிட்டு இருந்தார். மேலும் மற்றொரு படத்தில் அவர் உச்சநீதிமன்றம் காவி நிறத்தில் உள்ளதாக பதிந்திருந்தார். இதற்கு அவருக்கு எதிராக வழக்கு தொடர சிலர் அடடரணி ஜெனரல் அலுவலகத்துக்கு கடிதம் முகுளம் அனுமதி கோரினார்கள்.

இதை பரிசீலித்த அடடர்னி ஜெனரல் இந்த டிவிடுகள் நகைச்சுவையின் எல்லையை கடந்துள்ளதாக கருந்து தெரிவித்தார். மேலும் இது நீதிமன்ற அவமதிப்பு எல்லையில் உள்ளதால் குணால் மீது வழக்கு தொடர ஒப்புதல் அளித்துள்ளார்.