நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு : மத்திய அரசுக்கு உதவி செய்ய அட்டர்னி ஜெனரல் மறுப்பு

--

டில்லி

டப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உதவ முடியாது என அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நடந்த வாக்கெடுப்பில் அவர் வென்றது செல்லாது என்றும் உறுப்பினர்கள் கட்டாயத்தின் பெயரில் வாக்கெடுக்க வைக்கப்பட்டனர் எனக்கூறி ஓ பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மாஃபா பாண்டியராஜனால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதியரசர்கள் தீபக் மிஸ்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் அடங்கிய பென்ச் மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது.  இந்த வழக்கில் சட்ட உதவி அளிக்குமாறு அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இதற்கு வேணுகோபால் மறுப்பு தெரிவித்துள்ளார்.  தான் ஏற்கனவே பன்னீர்செல்வம் அணிக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கி வருவதால் தான் அரசுக்கு உதவ முடியாது என தெரிவித்துள்ளார்.