ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம்: பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.5 லட்சம்!

விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள நாச்சியாபேட்டை பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.5 லட்சத்துக்கு ஏலம் போனது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் ஒன்றியத்துக்குட்பட்டது நாச்சியார்பேட்டை பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்து தலைவர் பதவி எஸ்சி-எஸ்சி ஒதுக்கீடுக்கானது.

நாச்சியார்பேட்டை பஞ்சாயத்தில் 812 வாக்காகளர்கள் மட்டுமே உள்ளனர். வரும் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு ஊர் மக்கள் கலந்துகொண்ட ஊர்க்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று நடைபெற்ற ஊர் பொதுமக்கள் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என ஆலோசிக்கப்பட்டது.பின்னர்  நாச்சியார்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு யார் அதிகம் நிதி கொடுக்கிறார்களோ அவர்களை தேர்வு செய்வது எனவும்,

அதிகபட்சமாக 5 லட்சம் கொடுப்பவர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் பதவி உறுதி என அறிவிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.

TRAtokyofishmarket

அதையடுத்து, நாச்சியார்பேட்டை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒருவர் ரூ.5 லட்சம் கொடுத்து தனது வெற்றி உறுதி செய்துவிட்டார்.

ஆனால், இந்த ஏலம் முறைக்கு ஊரின் ஒருசிலரே எதிர்ப்பு தெரிவித்தனர்.அவர்கள் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதை உடனே ரத்து செய்ய வேண்டும். போலீஸ் பாதுகாப்புடன் உரிய முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று மண்டல துணை தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

அப்போது நாச்சியார்பேட்டை பஞ்சாயத்து தலைவர் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்று தெரிவித்தனர்.

இந்த சம்வம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்ட்டூன் கேலரி