பெய்ஜிங்:

சீனாவில் வாழும் முஸ்லிம்களுக்கு ஒருநிலைப் படுத்தும் முகாம்களை நடத்துவதற்கு சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் ஆதரவு தெரிவித்துள்ளார்.


சவுதி பத்திரிகையாளர் ஜமல் கஷோக்கி கொலை செய்யப்பட்டதையடுத்து, மேற்கத்திய நாடுகளின் கண்டனத்தை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் எதிர்கொண்டார்.

இந்நிலையில், சீனாவுக்கு வந்த அவர், அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவருக்கு சீன துணை அதிபர் ஹன் ஜெங் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, எரிசக்தி உற்பத்தி மற்றும் ரசாயன தொழிற்சாலை குறித்த ஒப்பந்தத்தில் இருவரும் கையொப்பமிட்டனர்.

பின்னர் சீன தொலைக் காட்சியில் பேசிய அவர், “தேச பாதுகாப்புக்காக தீவீரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை சீனா சரியாக எடுத்து வருவதாக இ பாராட்டினார்.

மேலும் சீனாவில் உள்ள முஸ்லீம்கள் தீவிரவாத பாதையில் சென்றுவிடாமல் இருக்க, ஒருநிலைப்படுத்தும் மறு கல்வி முகாமை சீனா நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்தார்.

இத்தகைய முகாம்களில் முஸ்லிம்களுக்கு கம்யூனிஸ போதனைகள் கற்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தீவிரவாதத்தை தடுக்கும் நடவடிக்கை என்று சீனா கூறி வருகிறது.