ஆடியோ விவகாரம் அனைத்தும் உண்மை… ! ஜெயக்குமாரை மெர்சலாக்கிய வெற்றிவேல்

சென்னை:

மைச்சர் ஜெயக்குமார் குறித்து சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியான விவகாரம் சூடுபிடித்து வருகிறது.  அமைச்சர் ஜெயக்குமார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல்  கூறினார்.

ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு கூற மாட்டோம் என்ற வெற்றிவேல்,  ஆதாரம் உள்ளது.. அதை தற்போது வெளியிட மாட்டோம் என்றும்… ஆடியோவில் கூறப்பட்டது  அனைத்தும் உண்மை என்று டிடிவி ஆதரவாளர்வெற்றிவேல் கூறி உள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் குறித்து  ஒரு பெண் பேசும் ஆடியோ கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், ராயபுரத்தைச் சேர்ந்தவர் இளம் பெண்  ஒருவர்,  சிபாரிசு கோரி அமைச்சர் ஜெயக்குமாரை தனது தாயாருடன்  சந்தித்த தாகவும், அதன் பிறகு ஏற்பட்ட பாலியல் தொடர்பால், கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி கவிதாவுக்கு வண்ணாரப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில்  ஆண் குழந்தை ஒன்று பிறந்திருப்பதாகவும், அதற்கான பதிவு ஆவனத்தில், குழந்தையின் பெயராக அமைச்சர் ஜெயக்குமார் பெயர் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், “ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் அல்ல. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர்.

சசிகலா மற்றும் டிடிவி தரப்பு மன்னார்குடி மாஃபியா கும்பல் தான் ஆடியோ மார்ஃபிங் கச்சிதமாக செய்து வெளியிட்டுள்ளனர். ஆடியோவின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த புகார் குறித்து எந்தவித சோதனைக்கும் நான் தயார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், டிடிவி ஆதரவாளராக வெற்றிவேல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சிபாரிசுக்காக சென்ற அந்த பெண்ணுக்கு, மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து அமைச்சர் ஜெயக்குமார் கற்பழித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாயாருக்கு  தெரிய வந்ததும்,  ‘உங்கள் மகளை தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன்’ என்று அமைச்சர் வாக்கு கொடுத்து, பல முறை அந்த பெண்ணுடன் அவர் ஒன்றாக இருந்துள்ளார் என்றார்.

அம்மா (ஜெயலலிதா) அப்பல்லோ  ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என நாங்கள் எல்லாம் அழுது கொண்டிருந்தபோது, அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சார நேரத்தில் திண்டுக்கலில் உள்ள ஓட்டல் ஒன்றில், அந்த பெண்ணுடன் அமைச்சர்  ஜெயக்குமார் தங்கியிருந்தார்’ என்றும்,ஹோட்டல் பெயர், அறை எண், ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்க ளும் தன்னிடம் இருக்கிறது. ஆதாரம் இல்லாமல் நான் எதையும் சொல்லவில்லை. என்னிடம் வேறு சில ஆதாரங்களும் உள்ளன.  என்று கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

மேலும்,  ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை என்று அமைச்சர் சொன்னாரே தவிர, குழந்தை என்னுடையது இல்லை என்று கூறினாரா?  என்று கேள்வி எழுப்பிய வெற்றிவேல், அவரால் அப்படி சொல்ல முடியாது. தேவைப்படும் போது, எல்லா ஆதாரங்களையும் வெளியிடுவேன் என்றும் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்தான் அது உண்மை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும், ஜெயக்குமார் சம்பந்தமான வீடியோ, ஆடியோ தன்னிடம் உள்ளதாக குறிப்பிட்ட வெற்றிவேல், அதைதாம் தற்போது வெளியிடப்போவதில்லை என்றும்,  என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் நாறிவிடும். அது ஜெயக்குமாருக்கு விபரீதமாகி விடும்.

ஜெயக்குமார் விவகாரம் தொடர்பாக ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.ஜெயக்குமார் எத்தனை பெண்களிடம் தவறிழைத்துள்ளார் என்பதற்கு பட்டியலே உள்ளது.

தம் மீது தவறில்லை என்கிற போது, டி.என்.ஏ சோதனை மூலம் குற்றமற்றவர் என ஜெயக்குமார் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜெயக்குமார் அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டால் சம்மந்தப்பட்ட பெண் புகார் கொடுப்பார். சம்மந்தப்பட்ட பெண் வெளியே வருவதற்கு அஞ்சுகிறார்.   அந்தப் பெண் என்னுடைய பாதுகாப்பில் இல்லை என்று தெரிவித்த வெற்றிவேல்,  அந்த பெண்ணுக்கும், குழந்தைக்கும் ஆபத்து ஏற்பட்டால் நாங்கள் பாதுகாப்பு அளிப்போம் என்றார்.

ஆடியோ விவகாரம் அனைத்தும் உண்மை. அமைச்சர் பதவியிலிருந்து ஜெயக்குமாரை நீக்க வேண்டும். இந்த ஆடியோ விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுத்து.  பாதிக்கப் பட்ட பெண்ணையும் அந்த குழந்தையையும் அவர்களது குடும்பத்தையும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறோம்

இவ்வாறு வெற்றிவேல்  கூறினார்.

கார்ட்டூன் கேலரி