பலாத்கார வழக்கை வாபஸ் பெற கன்னியாஸ்திரிக்கு மிரட்டல்

--

கோட்டயம்

லந்தர் ஆர்ச் பிஷப் மீது தொடுக்கப்பட்ட பலாத்கார வழக்கை வாபஸ் பெற கேரள கன்னியாஸ்திரிக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

                                                                  ஆர்ச் பிஷப் பிரான்கோ

ஜலந்தர் மறை மாவட்டத்தில் ஆர்ச் பிஷப்பாக உள்ளவர் பிரான்கோ முலாக்கல்.    கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் பிரான்கோ தன்னை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.  இது நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.    இந்த புகாரை மற்றொரு கன்னியாஸ்திரியான அனுபமா ஆதரித்தார்.

இந்த அதிர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அனுபமாவுக்கு கஞ்சிராப்பள்ளி தேவாலய பாதிரியார் ஜேம்ஸ் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.    இந்த ஆடியோ நேற்று சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

அந்த ஆடியோவில் பிஷப் பிரான்கோ மீதான பலாத்கார புகாரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவ்வாறு பெற்றால்  பலவித சலுகைகள் வழங்கப்படும் எனவும் ஜேம்ஸ் ஆசை வார்த்தைகள் கூறுகிறார்.   மேலும் புகாரை திரும்ப பெறாவிட்டால் ஒரிசா, அசாம் போன்ற பாதுகாப்பற்ற இடங்களுக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு துன்பம் அளிக்கப்படும் என மிரட்டல் விடுக்கிறார்.

பரவலாக பகிரப்படும் இந்த ஆடியோ காவல்துறையினாரால் கூடுதல் ஆதாரமாக உபயோகப்படுத்தப் படும் என செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

You may have missed