டில்லி

மறைந்த கோவா முதல்வர் வீட்டில் ரஃபேல் பேரம் குறித்த விவரங்கள் இருந்ததாக வந்த ஆடியோ டேப் உண்மைதான் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பணி புரிந்து வந்தார். அப்போது சர்ச்சைக்குரிய ரஃபேல் விமான கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது.   அந்த ஒப்பந்தத்தில் ஊழல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது குறித்து பாஜக மறுத்த போதிலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

கடந்த ஜனவரி மாதம் கோவா மாநில பாஜக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே பேசியதாக ஒரு ஆடியோ டேப் வெளியாகியது. அதில் அவர் பெயர் தெரிவிக்கப்படாத ஒரு அரசியல் தலைவரிடம் பேசுவதாக அந்த  காணப்பட்டது. அந்த பதிவில் மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கரிடம் ரஃபேல் பேரம் குறித்த ஆவணங்கள் உள்ளதாகவும் அதை அவர் தனது வீட்டின் படுக்கை அறையில் மறைத்து வைத்துள்ளதாகவும் விஸ்வஜித் ரானே கூறுவதாக அந்த டேப்பில் மேலும் காணப்பட்டது.

அந்த ஆடியோ டேப்பில் பிரமோத் சாவந்த் அடுத்த கோவா முதல்வராக வேண்டும் என ஆர் எஸ் எஸ் இயக்கம் விரும்புவதாக விஸ்வஜித் ரானே தெரிவித்திருந்தார். அந்த ஆடியோ டேப் பதிவு போலியானது எனவும் தம்மை வேண்டுமென்றே சர்ச்சையில் சிக்க வைக்க காங்கிரஸ் இவ்வாறு போலித் தகவல் வெளியிட்டுள்ளதாகவும் விஸ்வஜித் ரானே செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

தற்போது மனோகர் பாரிக்கர் மறைவை ஒட்டி புதிய முதல்வராக நேற்று பிரமோத் சாவந்த் பதவி ஏற்றுள்ளார். இது பாஜகவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டது என சொல்லைப்பட்டாலும் இதன் பின்னனியில் ஆர் எஸ் எஸ் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் வெளியான ஆடியோ பதிவில் இந்த தகவலை விஸ்வேந்திர ரானே குறிப்பிட்டுள்ளார். இதை சுட்டிக் காட்டிய காங்கிரஸ் அந்த ஆடியோ பதிவு போலியானதாக இருக்க வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளது.

இது கோவா அரசியலில் மட்டுமின்றி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.