புதுடெல்லி:
ந்தியாவில் உள்ள தேசிய நினைவு சின்னங்கள் முன் போட்டோ, செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை ஆகஸ்டு 12 முதல் 18 வரை அமலில் இருக்கும்.
photo
இந்திய சுதந்திரம் அடைந்து  70  ஆண்டுகள் ஆகிறது.  இதையடுத்து. இன்று முதல் 15 நாட்கள் நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மத்தியபிரதேசத்தில் இன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி சுதந்திர தின விழாவை தொடங்கி வைக்கிறார்.
16TH_INDIA_GATE_1300806f
சுதந்திர தினத்தை கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், தீவிரவாதிகள்  தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து தேசிய நினைவிடங் களிலும் வரும் 12 முதல் 18 ஆம் தேதி வரை போட்டோ, செல்பி எடுக்க தடை விதித்து மத்திய சுற்றுலாத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கடைபிடிக்க வேண்டிய வரைமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் குறிப்பிட்டு உள்ளது.