ஆகஸ்டு 25-ந்தேதி திமுக இளைஞர் அணி கூட்டம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:

ரும் (ஆகஸ்டு) 25-ந்தேதி திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று திமுக இளைஞர் அணித்தலைவர்  உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

திமுக தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி கடந்த ஜூலை மாதம் 4ந்தேதி வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி ஆலோசனை செய்து வரும் உதயநிதி, வரும்  25-ந்தேதி திமுக இளைஞர் அணி  மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர் கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவித்து உள்ளார்.

இந்த கூட்டம் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை கிண்டி 100 அடி சாலையில் உள்ள  ஹில்டன் ஓட்டலில் நடைபெறும் என்றும் கூட்டத்துக்கு,  இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அசன்முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, எஸ்.ஜோயல், துரை ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள். இதில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி