ஆகஸ்டு-28: இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நாள் இன்று…

கொழும்பு:

கஸ்டு-28ந்தேதியான இன்றைய நாளில்தான்,  இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் முதன்முதலாக  டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதை ஐசிசி டிவிட்டரில் வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி போட்டிகளிலும் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களுக்கு தான் முக்கியத்துவம் அதிகம். எதிரணியின் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதில், பவுலர்களின் பங்களிப்பு அபாரமானது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய பல ஜாம்பவான்கள் உள்ளனர். அவர்கள் ஓய்வு பெற்று விட்டாலும், அவர்கள் படைத்த சாதனைகள் இன்றுவரை கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நிலைத்து இருக்கிறது. அதன்படி, 800 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருப்பவர் முத்தையா முரளிதரன்.

இவர் இலங்கை அணிக்காக 1992 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். இவரது சுழலில் சிக்காதவர்களே கிடையாது.  நாட்டில் உள்ள, அனைத்து அணிகளின் பேட்ஸ்மேன்களும் முத்தையா முரளிதரன் பந்து வீச வந்தாலே அதிர்ச்சி அடைவார்கள்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையையும் முத்தையா முரளிதரன் ஏற்படுத்தி உள்ளார்.  இவர் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 800 விக்கெட்டுகளையும், 22 முறை 10 விக்கெட்டுகளையும், 67 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.