நடிகைகள் எதிர்ப்பு எதிரொலி: ஆகஸ்டு 7ந்தேதி மலையாள நடிகர் சங்க அவசர கூட்டம்

கொச்சி:

லையாள நடிகர் சங்கமான அம்மாவில், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகைகள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7ந்தேதி மலையாள நடிகர் சங்க அவசர கூட்டம் கூட்டப்படுவதாக அம்மா

மலையாள நடிகைகள் சங்கத்தினரின்  (Women in Cinema Collective) வேண்டுகோளை எற்று இந்த அவசர கூட்டம் கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு நடிகைகள் ரேவதி, பார்வதி, பத்மபிரியா உள்பட  பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இது மலையாள பட உலகில சலசலப்பை ஏற்படுத்தியது.

லையாள நடிகர் சங்கமான  அம்மாவுக்கு (Association of Malayalam Movie Artists), புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்  சில மாதங்களுக்கு முன்பு கொச்சியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், புதிய தலைவராக மோகன்லால் தேர்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளராக பாபு, பொருளாளராக ஜெகதீஷ் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்தெ டுக்கப்பட்டனர்.

அத்துடன் பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் திலீப் ஏற்கனவே அம்மாவில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டார். இது சர்ச்சையை எழுப்பியது. இதன் காரணமாக சில நடிகைகள் புதிய தலைவரான மோகன்லாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

ஆனால், பொதுக்குழுவில் பெரும்பாலான நடிகைகள் ஆதரவு தெரிவித்ததாலேயே திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டார் என மோகன்லால் விளக்கம் அளித்தார்.

இதை ஏற்காத கேரள திரையுலகப் பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்த பார்வதி, ரேவதி, பத்மபிரியா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். அதில்,  திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்த்தது ஒட்டு மொத்த பெண்கள் சமூகத்தையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. இந்த முடிவை நடிகர் சங்கம் திரும்ப பெற வேண்டும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், அடுத்த மாதம் 7ந்தேதி நடிகர் சங்க அவரச கூட்டம் நடைபெறும் என்றும் அம்மா அறிவித்து உள்ளது. இந்த கூட்டத்தில் திலீப் சேர்க்கப்பட்டது மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.