ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், ஷரபோவா முதல் சுற்றில் வெற்றி!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால், ஷரபோவா உள்ளிட்டோர் முதல் சுற்றில் வெற்றிப்பெற்றுள்ளனர். முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரரை எதிர்கொண்ட நடால் 6-4, 6-3,7-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றிப்பெற்றார்.

open

கிராண்ட் ஸ்லாம் போட்டி என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்றுமுதல் நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள ரபேல் நடால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டக்வொர்த்தை முதல் சுற்றில் எதிர்கொண்டார். போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய நடால் ஆஸ்திரேலிய வீரரை 6-4, 6-3, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி வெற்றிப்பெற்றார். இதனை தொடர்ந்து நடால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றுமொரு ஆட்டத்தில் கெவின் ஆண்டர்சன் 6-3, 5-7, 6-2, 6-1 என்ற நேர்செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் அட்ரியன் மனோரியாவை வீழ்த்தினார். இதேபோன்று பல்கேரிய வீரர் டிமிட்ரோவ், ஸ்பெயின் வீரர் வெர்ட்ஸ்கோவா உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றிப்பெற்றது.

இதேபோன்று பெண்களுக்கான போட்டியில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா முதல் சுற்றில் இங்கிலாந்து வீராங்கனை ஹேரியட் டார்ட்டை எதிர்கொண்டார். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷரபோவா 6-0, 6-0 என்ற நேர்செட் கனக்கில் ஹேரியட்டை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். மேலும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கார்சியா, பெலாரஸ் நாட்டை சேர்ந்த ஆர்யனா, ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜூலியா கோஜர்ஸ் உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றிப்பெற்றனர்.