3வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை வீழ்த்த தயாராகி வரும் 7வயது சிறுவன்!

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 7வயது சிறுவன் சேர்க்கப்பட்டுள்ளார். இதய கோளாறு காரணமாக தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சிறுவனது கனவை நனவாக்கும் பொருட்டு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Archie_Schiller

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை வென்று சாதனை படைத்தது. அடுத்து பெர்த் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்கும் விதமாக ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

இதன் காரணமாக டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலை பெற்றன. இதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது. மெல்போர்னில் 26-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் ‘பாக்ஸிங்டே’ டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 7-வயது சிறுவன் சேர்க்கப்பட்டுள்ளார்.

7வயதாகும் ஆர்ச்சி சில்லர் சிறப்பாக லெக் ஸ்பின்னர் என்பதால், 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியுடன் அடிலெய்ட் டெஸ்ட், பெர்த் டெஸ்ட் ஆகியவற்றில் நாதன் லயானுடன் பயிற்சி எடுத்த ஆர்ச்சி சில்லர் 3-வது டெஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஆஸ்திரேலிய, இந்திய அணியினர் பங்கேற்றனர். அப்போது, 7வயது சிறுவன் ஆர்ச்சி சில்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, அணியில் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

அனைவரும் கேட்பது யார் இந்த ஆர்சி சில்லர் ?

ஆர்சி சில்லர் பிறந்தது முதல் இதய கோளாறால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவருக்கு 7 வயது தொடங்கியுள்ளது. அதற்குள் ஆர்சிக்கு சுமார் 13 இதய அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். இருந்தாலும் ஆர்சியின் ஆயுட்காலம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என மருத்துவர்கள் தெரிவித்துவித்தனர்.

இந்நிலையில் ஆர்சியின் கனவை நினைவாக்கும் முயற்சியில், அவரது குடும்பத்தினர் இறங்கினர். கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட ஆர்சி, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வேண்டும் என அவரின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதன்படி ஆர்சி சில்லரின் குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆர்சி ஆஸ்திரேலிய அணியில் சேக்க்கப்பட்டதை அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், சிறுவனிடம் தொலைபேசி உரையாடல் மூலம் உறுதி செய்தார். அப்போது நீ அணியில் சேர்க்கப்பட்டால் என்ன செய்வாய் என ஜஸ்டின் கேட்ட கேள்விக்கு, ‘விராட் கோலியை அவுட்டாக்குவேன்’ என ஆர்சி பதில் அளித்தார்.