Random image

2019 பிறந்தது: நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு (வண்ணப்படங்கள்)

வெல்லிங்டன்:

2019ம் ஆண்டு பிறப்பை உலக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில்  நியூலாந்து ஆஸ்திரேலியா, மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கையுடன் கோலாகலமாக வரவேற்றனர்.

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு நியூசிலாந்து. இது வடக்குத் தீவு, தெற்குத் தீவு ஆகிய இரண்டு முக்கியமான நிலப் பகுதிகளையும், சதாம் தீவுகள் போன்ற பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. புவியியல் அடிப்படையில் நியூசிலாந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

. நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரியன் உதிக்கும் முதல் நாடாக உள்ளது.  இந்நிலையில், (இந்திய நேரப்படி மாலை 4.30 மணி) நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது.