டி20 உலகக் கோப்பையை 4வது முறையாக வென்று ஆஸ்திரேலிய மகளிர் அணி சாதனை!!

பெண்கள் டி20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்தை 8விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. 4வது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

australia

பெண்கள் டி20 உலகக் கோப்பை போட்டி மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உட்பட 10 அணிகள் பங்கேற்றன. இந்த தொடரின் இறுதி போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீராங்கனைகள் டேனியல் வியாட் 43 ரன்களும், கேப்டன் நைட் 25 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.

பிற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 19.4 ஓவரின் 105 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் களமிறங்கினர். இதில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 4வது முறையாக உலககோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.