Random image

சாம்பியன்ஸ் கோப்பை: பெனால்டி சூட் அவுட்டில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

பிரெடா:

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் பெனால்டி சூட் அவுட் முறையில் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

நெதர்லாந்தில் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் போட்டி நடந்தது. இதின் இன்று இறுதிபோட்டி நடந்தது. இதில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதின. முடிவில் 2 அணிகளும் 1-&1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

இதையடுத்து பெனால்டி சூட் அவுட் முறை மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் இந்திய அணியை 3&-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.