2வது டெஸ்ட் போட்டி: 146 ரன்கள் வித்யாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிப்பெற்று சமனிலையில் உள்ளன.

australia

ஆஸ்திரேலிய சென்ற இந்திய 3டி20, 4டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 போட்டிகள் முடிந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது.

இதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 326ரன்களை எடுத்தது. அதன்பிறகு பேட்டிங் செய்த இண்டிய அணி 248 ரன்களை மட்டுமே எடுத்து 43 ரன்களுக்கு பின்னிலை வகித்தது.

இதையடுத்து தனது 2வது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. 2வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 243 ரன்களாஇ எடுத்து, இந்தியாவிற்கு 287 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன்பிறகு வெற்றிப்பெறும் இலக்குடன் விளையாடிய இந்திய அணி 140 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து, 2வது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. அடுத்து இரு அணிகளும் மோதும் 3வது டி20 போட்டி மெல்பேர்ன் நகரில் இம்மாதம் 25ம் தேதி தொடங்க உள்ளது.