ஹாக்கியில் இந்தியாவை வென்ற ஆஸ்திரேலியா!

புவனேஷ்வர்: புரோ லீக் தொடர் ஹாக்கிப் போட்டியில், இந்திய அணியை 3-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.

புரோ லீக் ஹாக்கி சர்வதேச தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மொத்தம் 9 நாடுகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா 2 போட்டிகளில் மோதும்.

இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளை எதிர்கொண்டது. இந்நிலையில், தனது மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது.

இப்போட்டியில், 6வது மற்றும் 18வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணியினர் கோலடித்து முன்னிலைப் பெற்றனர். பின்னர், இந்திய அணியினர் பதிலடி கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் இரு அணியினரும் சளைக்காமல் போராடினர். இறுதியில், முதலிலேயே முன்னிலைப் பெற்றதால், ஆஸதிரேலிய அணி 4 கோல்களை அடிக்க, இந்திய அணியால் 3 கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. 3-4 என்ற கோல் கணக்கில் போட்டியை இழந்தது இந்திய அணி.