வாட்ச்:

ஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுதீயினால் 50கோடி அளவிலான வன உயிரினங்கள் பலியாகி உள்ளதாக கூறப்படும் நிலையில், அங்கு  காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அங்கு திடீர் மழை பெய்ததால், தீயணைப்பு வீரர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை கொண்டாடினார்.

ஆஸ்திரேலியா முழுவதும் பரவி வரும் காட்டுத்தீ, உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 12க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமான வீடுகள், பல நூறு ஏக்கர் அளவிலான வனங்கள், அங்கு வசித்து வந்த,  கங்காருக்கள், கோலாக்கள், மார்சுபியல்களும் உள்பட 50கோடிக்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பலியாகியுள்ளன.

அந்நாட்டின் தெற்கு கடற்கரையின் பல்வேறு பகுதிகளைச் சூழ்ந்ததால், மக்கள் பாதுகாப்பான இடங்களைத் சென்றனர். ஆனால், விலங்குகள்தான் பாவம். அவை தீயில் சிக்கி பலியாகி வருகின்றன. அடிலெய்ட் மலையில் முள்வேலி வேலியில் சிக்கிய ஒரு கங்காரு குட்டி காட்டுத்தியில் கருகி பலியான புகைப்படம் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பலரின் மனதை உலுக்கி வைரல் ஆகிவருகிறது.

“ஆஸ்திரேலியா நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும் சூழ்ந்திருக்கும் தற்போதைய புயலான, நம் கண்களுக்கு முன்பாக எரியும்  வன உயரினங்களை பாதுகாக்க  அரசு என்ன செய்யப்போகிறது? காலநிலை மாற்றத்தைப் பற்றி ஏதாவது செய்வதற்கு முன்பு நாம் எவ்வளவு பேரழிவைச் சந்திக்க வேண்டும்? கோலாக்களின் இழப்பு? நாம்து தனித்துவமான மற்றும் அழகான வனவிலங்குகளுக் கான முக்கியமான வாழ்விடங்களை பரந்த அளவில் அழிப்பது? எத்தனை ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டு மனித உயிர்களை இழக்க வேண்டும்? ”என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு எதிராக பொங்கி வருகின்றனர்.

இந்த நிலையில்   போர்ட் மேக்வாரியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோலண்ட் சமவெளியில் பகுதியில் திடீர் என மழை பெய்ததால், காட்டுத்தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் அந்த பகுதியில் உள்ள உள்ளூர் மக்களுடன்  இணைந்து,  சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் நடனமாடும் வீடியோவை  சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்த வீடியோ பதிவேற்றப்பட்ட சில மணி நேரத்திற்குள்  223,000 க்கும் மேற்பட்ட பார்வைகளையும் கிட்டத்தட்ட 4400 ஷேர்களையும் பெற்றுள்ளது. இதை பார்க்கும் பலர் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.