பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட்டில், முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலியா, முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை எடுத்துள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், அந்த அணியின் துவக்கம் சரியாக அமையவில்லை. வார்னர் மற்றும் ஹாரிஸ் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

லபுஷேன் 108 ரன்கள் அடித்தார். ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களுக்கு வெளியேறினார். மேத்யூ வேட் அடித்தது 45 ரன்கள்.

தற்போதைய நிலையில், கேமரான் கிரீன் மற்றும் கேப்டன் டிம் பெய்னே, களத்தில் வலுவாக நின்று ஆடி வருகிறார்கள். எனவே, நாளை காலையில் இவர்களின் விக்கெட்டை விரைவாக காலிசெய்ய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பல புதிய பந்துவீச்சாளர்கள் ஓரளவு நன்றாகவே பந்துவீசி வருகிறார்கள் எனலாம். நடராஜனுக்கு 2 விக்கெட்டுகள் கிடைக்க, சிராஜ், சுந்தர் மற்றும் ஷர்துலுக்கு தலா 1 விக்கெட் கிடைத்துள்ளது.