நிலைகொண்டு ஆடும் ஆஸ்திரேலிய அணி – இந்தப் போட்டியில் சாதிப்பாரா ஸ்மித்?

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதலில் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி, முந்தையப் போட்டிகளைப்போல், விக்கெட்டுகளை விரைவாக இழக்காமல், நிலைக்கொண்டு ஆடி வருகிறது.

டேவிட் வார்னர் மட்டும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, துவக்க வீரர் வில் புகோவ்ஸ்கி 62 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தற்போது மூன்றாவது வீரரான லபுஷேனும் அரைசதம் அடித்துள்ளார். 110 பந்துகளை சந்தித்த மார்னஸ், 54 ரன்களை அடித்து களத்தில் உள்ளார்.

அவருடன், நான்காவது விக்கெட்டாக ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், 30 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களை அடித்துள்ளார். அவர், தனது விக்கெட்டை இழக்காமல் நிலைத்து நின்றுவிடும் பட்சத்தில், இந்திய அணிக்கு பெரும் சிக்கல்தான். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய ஸ்மித் கடும் விமர்சனங்களை சந்தித்திருந்தார். அதை துடைப்பதற்கு அவர் முயல்வார் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போயை நிலையில், ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 148 ரன்களை சேர்த்துள்ளது. வில் புகோவ்ஸ்கியின் விக்கெட்டை நவ்தீப் சைனி கைப்பற்றினார்.