பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புது வகை வைரஸ்: ஆஸ்திரேலியா, இத்தாலி, நாடுகளிலும் பரவியதால் பீதி

சிட்னி: பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புது வகை வைரஸ், ஆஸ்திரேலியா, இத்தாலி, நாடுகளிலும் பரவி இருக்கிறது.

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி, மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது கொரோனா வைரஸ். அதன் தாக்கம் இன்னமும் நீடிக்கும் நிலையில், பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி அதிர்ச்சியை தந்துள்ளது.

கொரோனாவை விட அதிக வீரியமிக்க வைரசாக உருமாறி, 70 சதவீதம் வேகமாக பரவுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.

இந் நிலையில், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட அதே வீரியமிக்க வைரஸ் இப்போது இத்தாலி, ஆஸ்திரேலியா நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் வந்த 2 பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த வைரஸ் இருப்பது இது உறுதியானது.

இத்தாலி வந்த  விமான பயணியிடமும் புது வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மேற்கண்ட இரண்டு நாடுகள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளன. பிரிட்டனில் இருந்து பிற நாடுகளுக்கு இந்த புது வைரஸ் இடம்பெயர்ந்துள்ளதால், உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றன.