லண்டன்: இங்கிலாந்து எதிரான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை எடுத்துள்ளது.

இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஆரோன் பின்ச், 16 ரன்களுக்கு நடையைக் கட்டினார். ஓரளவு அடித்து ஆடிவந்த ஸ்டாய்னிஸ், 34 பந்துகளில் 43 ரன்களை அடித்திருந்தபோது, ஆட்டமிழந்தார். தற்போது, மார்னஸ் 18 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்தின் மார்க்வுட் 2 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.