63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறும் ஆஸ்திரேலியா!

லண்டன்: தொடரை வெல்லக்கூடிய 3வது ஒருநாள் போட்டியில், 303 ரன்களை எடுக்க வேண்டிய ஆஸ்திரேலிய அணி, வெறும் 63 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

துவக்க வீரர் டேவிட் வார்னர் இம்முறையும் சோபிக்கவில்லை. வெறும் 24 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். கேப்டன் ஆரோன் பின்ச் 12 ரன்களுக்கும், ஸ்டாய்னிஸ் 4 ரன்களுக்கும், மிட்செல் மார்ஷ் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்துள்ளனர்.

இதுவரை, கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

தற்போதைய நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் தேவைப்படுகிறது. அதை, யார் நிறைவேற்றுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.