பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில், நான்காம் நாள் தேநீர் இடைவேளையின்போது, 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 243 ரன்களை எடுத்துள்ளது. அதேசமயம், மழையாலும் ஆட்டம் தடைபட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில், இரண்டாவது இன்னிங்‍ஸை துவக்கிய ஆஸ்திரேலிய அணியில், துவக்க வீரர்களான மார்கஸ் 38 ரன்களையும், டேவிட் வார்னர் 48 ரன்களையும் அடித்தனர்.

லபுஷேன் 25 ரன்களுக்கு அவுட்டாக, ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களை சேர்த்தார். மேத்யூ வேட், முகமது சிராஜ் பந்தில் டக்அவுட். கேமரான் கிரீன் 37 ரன்களையும், கேப்டன் டிம் பெய்னே 27 ரன்களையும் சேர்த்தனர். தற்போதைய நிலையில், இந்திய அணியைவிட, ஆஸ்திரேலியா 276 ரன்கள் முன்னிலைப் ப‍ெற்றுள்ளது.

தற்போது கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் களத்தில் உள்ளனர்.

இந்தியா சார்பில், புதிய இளம் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகுர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, சுந்தருக்கு 1 விக்கெட் கிடைத்துள்ளது. நடராஜன் இன்னும் தன் கணக்கை தொடங்கவில்லை.