ஒருநாள் தொடர் வெற்றி – புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலியா!

துபாய்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம், ஐசிசி உலகக்கோப்பை சூப்பர் ஒருநாள் லீக் புள்ளிகள் அட்டவணையில், முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது ஆஸ்திரேலிய அணி.

இதன்மூலம், இதுவரை அப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தை, இரண்டாமிடத்திற்கு தள்ளியுள்ளது ஆஸ்திரேலியா.

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றியின்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு 40 புள்ளிகள் கிடைத்துள்ளன. அதேசமயம், இந்தப் புள்ளி பட்டியலில் 9 புள்ளிகளுடன், இந்திய அணி 6வது இடத்தில் உள்ளது.

13-அணி சாம்பியன்ஷிப்பின் முந்தைய தொடரில், இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது ஆஸ்திரேலியா.

இந்தப் புள்ளிகளின் மூலம், அடுத்த 2023ம் ஆண்டின் உலகக்கோப்பையில் பங்குபெறும் அணிகள் தேர்வுசெய்யப்படவுள்ளன. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இந்தியா தானாகவே தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.