கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு 303 ரன்கள் தேவை – இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ச‍ெய்த இங்கிலாந்து, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம், கோப்பை வெல்வதற்கு 303 ரன்களை எட்ட வேண்டிய நிலையில் உள்ளது ஆஸ்திரேலியா. இத்தொடர் ஏற்கனவே 1-1 என்று சமநிலையில் உள்ளது.

இங்கிலாந்தின் பேர்ஸ்டோ 126 பந்துகளில் 112 ரன்களை அடித்தார். சாம் பில்லிங்ஸ் 57 ரன்களை அடித்தார். கிறிஸ் வோக்ஸ் தன் பங்கிற்கு 53 ரன்களை சேர்த்தார். இறுதியில், அந்த அணி 300 ரன்களைத் தாண்டியது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஸம்பாவிற்கும், மிட்செல் ஸ்டார்க்கிற்கும் தலா 3 விக்கெட்டுகள் கிடைத்தன.

கார்ட்டூன் கேலரி