ஆஸ்திரேலியா ஒப்பன் டென்னிஸ் : செரினா வில்லியம்ஸ் தோல்வி

--

ஸ்திரேலியா

ஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ் கால் இறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ் போட்டியில் கால் இறுதிச் சுற்று இன்று நடந்தது. இதில் அனைவரும் எதிர்பார்த்த செரினா வில்லியம்ஸ் மற்றும் கரோலின் லிஸ்கோவா ஆகியோர் மோதினர். அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 23 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டியின் சாம்பியன் ஆவார்.

இவரை எதிர்த்து விளையாடிய முன்னாள் முதல் நிலை வீராங்கனை கரோலின் லிஸ்கோவா செக் குடியரசை சேர்ந்தவர் ஆவார். ரசிகர்களின் ஆர்வத்தை மிகவும் தூனிட்ய இந்த போட்டி இன்று சுமர் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் நடந்தது.

இந்த போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்துள்ளார். இது டென்னிஸ் ரசிகர்களுக்கு மிகவும் அதிச்சியை அளித்துள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட கரோலின் 6-4, 4-6, 7-5 என்னும் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.

அரை இறுதிப் போட்டிகளில் நவாமி ஒசாகா வும் கரோலின் லிஸ்கோவாவும் மோதுகின்றனர்.